பாடல் 1069
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனா தனத்த தனனா தனத்ததனனா தனத்ததனதான
பாடல் வரிகள்
கருவாய் வயிற்றி லுருவா யுதித்துமுருகாய் மனக்கவலையோஆட
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்ததலைபோய் வெளுத்துமரியாதே
இருபோது மற்றை யொருபோது மிட்டகனல்மூழ்கி மிக்கபுனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்குமியல்போத கத்தைமொழிவாயே
அருமாத பத்தஅமரா பதிக்குவழமுடி விட்டதனைமீள
அயிரா வதத்து விழியா யிரத்தனுடனே பிடித்துமுடியாதே
திருவான கற்ப தருநா டழித்துவிபுதேசர் சுற்றமவைகோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்தசிறைமீள விட்டபெருமாளே.
