பாடல் 1065
துயர மறுநின் வறுமை தொலையு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனன தனன தனனதனன தனனதனதான
பாடல் வரிகள்
துயர மறுநின் வறுமை தொலையுமொழியு மமிர்தசுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுகதுவளு மெமதுபசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுகசவடி கடகநெளிகாறை
தருக தகடொ டுருக எனுமிவிரகு தவிர்வதொருநாளே
உ யரு நிகரில் சிகரிமிடறுமுடலு மவுணர்நெடுமார்பும்
உ ருவ மகர முகர திமிரவுததி யுதரமதுபீற
அயரு மமரர் சரண நிகளமுறிய எறியுமயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமுமழகு முடையபெருமாளே.
