பாடல் 1064
குருதி யொழுகி யழுகு மவல
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனன தனன தனனதனன தனனதனதான
பாடல் வரிகள்
குருதி யொழுகி யழுகு மவலகுடிலை யினிதுபுகலாலே
குலவு மினிய கலவி மகளிர்கொடிய கடியவிழியாலே
கருது மெனது விரக முழுதுகலக மறலிஅழியாமுன்
கனக மயிலி னழகு பொழியகருணை மருவிவரவேணும்
பரிதி சுழல மருவு கிரியைபகிர எறிசெய்பணிவேலா
பணில வுததி யதனி லசுரர்பதியை முடுகவரும்வீரா
இரதி பதியை யெரிசெய் தருளுமிறைவர் குமரமுருகோனே
இலகு கமல முகமு மழகுமெழுத வரியபெருமாளே.
