பாடல் 1058
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஹம்ஸத்வனி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகிடதகதிமி-3 1/2தனன தாத்தன தனன தாத்தனதனன தாத்தனதந்ததான
பாடல் வரிகள்
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்இரவு போய்ப்புகல்கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெருவெளிய தாய்ப்புதைவின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பருகமுத மாய்ப்புலனைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றியகருணை வார்த்தையிருந்தவாறென்
உ ததி கூப்பிட நிருத ரார்ப்பெழஉ லகு போற்றிடவெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டியவுரவ கோக்கிரிநண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகைமுலைகள் தேக்கிடவுண்டவாழ்வே
முளரிபாற்கடல் சயில மேற்பயில்முதிய மூர்த்திகள்தம்பிரானே.
