பாடல் 1057
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தாத்தன தனன தாத்தனதனன தாத்தனதந்ததான
பாடல் வரிகள்
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொருகுறைவி லாப்பலஎன்பினாலுங்
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டியகுடிலி லேற்றுயிரென்றுகூறும்
வடிவி லாப்புல மதனை நாட்டிடுமறலி யாட்பொரவந்திடாமுன்
மதியு மூத்துன தடிக ளேத்திடமறுவிலாப் பொருள்தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்கருதொ ணாக்கணிவெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்களவி னாற்புணர்கந்தவேளே
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழமுடிய வேற்கொடுவென்றவீரா
முடிய லாத்திரு வடிவை நோக்கியமுதிய மூர்த்திகள்தம்பிரானே.
