பாடல் 1056
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தனதனன தனன தாத்தனதனதான
பாடல் வரிகள்
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்மறுகி புறமு மார்த்திடவுடலுடே
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவருடனு மியமன் மாட்டிடஅணுகாமுன்
உ கமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமுமுளது மிலது மாச்செனவுறைவோரும்
உ ருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடுஉ னது கழல்கள் போற்றிடஅருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புகழுடைய திருத ராட்டிரபுதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்புவியின் விதன மாற்றினர்மருகோனே
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுருவெனவு மருவி வேற்கொடுபொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படைவிசைய முறவும் வீக்கியபெருமாளே.
