பாடல் 1048
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவிகுலைய ஏம னாலேவிவிடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாதகொடுமை நோய்கொ டேகோலியெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழிபயமு றாமல் வேலேவுமிளையோனே
பழுது றா பாவாண ரெழுதொ ணாத தோள்வீரபரிவி னோடு தாள்பாடஅருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதிமடுவி லானை தான்மூலமெனவோடி
வருமு ராரிகோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்வசன மோம றாகேசன்மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலிகடிய பேயி னோடாடிகருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீதகருணை மேரு வேதேவர்பெருமாளே.
