பாடல் 1047
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போகஇனிய போக வாராழியதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளுமினிய மாதர் தோள்கூடிவிளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரியாஞானசமுக மோத ராபூதமுதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதாரதரணி யோநி ராகாரவடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூரபரம யோகி மாதேசிமிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாதபதும சேக ராவேலைமறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோதகமுக மூஷி கர்ருடமததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உ லக மேழு சூழ்போதுகருணை மேரு வேதேவர்பெருமாளே.
