பாடல் 1046
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீச
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீசரமுத ளாவு மாவேசமதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதினளவு மோடி நீடோ திநிழலாறித்
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேததுறவ ரான பேர்யாருமடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடுதுவளு வேனை யீடேறுநெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வானபவதி யாம ளாவாமைஅபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகாரபரம யோகி னீமோகிமகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயிகனத னாச லாபாரஅமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
