உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1016

குகையில்நவ நாத ருஞ்சி றந்த

ராகம்
பெஹாக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம்(எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனன தான தந்த தந்ததனதனன தான தந்த தந்ததனதனன தான தந்த தந்ததனதான

பாடல் வரிகள்

குகையில்நவ நாத ருஞ்சி றந்தமுகைவனச சாத னுந்த யங்குகுணமுமசு ரேச ருந்த ரங்கமுரல்வேதக்

குரகதபு ராரியும்ப்ர சண்டமரகதமு ராரியுஞ்செ யங்கொள்குலிசகைவ லாரியுங்கொ டுங்கணறநூலும்

அகலியபு ராண மும்ப்ர பஞ்சசகலகலை நூல்க ளும்ப ரந்தஅருமறைய நேக முங்கு விந்தும்அறியாத

அறிவுமறி யாமை யுங்க டந்தஅறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்அருணசர ணார விந்த மென்றுஅடைவேனோ

பகைகொள்துரியோத னன்பி றந்துபடைபொருத பார தந்தெ ரிந்துபரியதொரு கோடு கொண்டு சண்டவரைமீதே

பழுதறவி யாச னன்றி யம்பஎழுதியவி நாய கன்சி வந்தபவளமத யானை பின்பு வந்தமுருகோனே

மிகுதமர சாக ரங்க லங்கஎழுசிகர பூத ரங்கு லுங்கவிபரிதநி சாச ரன்தி யங்கஅமராடி

விபுதர்குல வேழ மங்கை துங்கபரிமளப டீர கும்ப விம்பம்ருகமதப யோத ரம்பு ணர்ந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →