உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1012

இமகிரிமத்திற் புயங்க வெம்பணி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதந்ததான

பாடல் வரிகள்

இமகிரிமத்திற் புயங்க வெம்பணிகயிறது சுற்றித் தரங்க வொண்கடல்இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழுநஞ்சுபோலே

இருகுழை தத்திப் புரண்டு வந்தொருகுமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலைரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும்விஞ்சிநீடு

சமரமி குத்துப் பரந்த செங்கயல்விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சியதமனிய வெற்புக் கிசைந்த வம்பணிகொங்கைமீதே

தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெசததளம் வைத்துச் சிவந்த நின்கழல்தந்திடாயோ

அமரர்து திக்கப் புரந்த ரன்தொழஎழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறியலையைய டைத்துக் கடந்து சென்றெதிர்முந்துபோரில்

அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்இருபது கொற்றப் புயங்கள் சிந்திடஅழகிய கொத்துச் சிரங்க ளொன்பதுமொன்றுமாளக்

கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்மருமக மட்டுக் கொன்றை யந்தொடைகறையற வொப்பற்ற தும்பை யம்புலிகங்கைசூடுங்

கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்கடினத னத்திற் கலந்தி லங்கியதம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →