பாடல் 1005
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- காம்போதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரிநெறுநெ றெனநெரியவுமுது பணிபதிநிபிட முடிகிழி யவுநில மதிரவும்விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்நினது கருணையு முறைதரு பெருமையும்நிறமு மிளமையும் வளமையு மிருசரணமும்நீப
முடியு மபிநவ வனசரர் கொடியிடைதளர வளர்வன ம்ருகமத பரிமளமுகுள புளகித தனகிரிதழுவியதிரடோ ளும்
மொகுமொ கெனமது கரமுரல் குரவணிமுருக னறுமுக னெனவரு வனபெயர்முழுது மியல்கொடு பழுதற மொழிவதுமொருநாளே
கொடிய படுகொலை நிசிசர ருரமொடுகுமுகு மெனவிசை யுடனிசை பெறமிகுகுருதி நதிவித சதியொடு குதிகொளவிதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமரமொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்குருகு பெயரிய வரைதொளை படவிடுசுடர்வேலா
இடியு முனைமலி குலிசமு மிலகிடுகவள தவளவி கடதட கனகடஇபமு மிரணிய தரணியு முடையதொர்தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுகககன புனிதையும் வனிதைய ரறுவரும்எனது மகவென வுமைதரு மிமையவர்பெருமாளே.
