பாடல் 1004
தசையு முதிரமு நிணமொடு செருமிய
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- பாகேஸ்ரீ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
தசையு முதிரமு நிணமொடு செருமியகரும கிருமிக ளொழுகிய பழகியசடல வுடல்கடை சுடலையி லிடுசிறுகுடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்சவலை யறிவினர் நெறியினை விடஇனியடியேனுக்
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொருவசன முறஇரு வினையற மலமறஇரவு பகலற எனதற நினதறஅநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்இறுதி யறுதியி டவரிய பெறுதியைஇருமை யொருமையில் பெருமையை வெளிபடமொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்அமலை விமலைக ளெழுவரும் வழிபடஅருளி அருணையி லுறைதரு மிறையவளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவைஅதல முதலெழு தலமிவை முறைமுறைஅடைய அருளிய பழையவ ளருளியசிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழிமவுன மருளிய மகிமையு மிமையவர்மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்வடிவேலும்
மயிலு மியலறி புலமையு முபநிடமதுர கவிதையும் விதரண கருணையும்வடிவு மிளமையும் வளமையு மழகியபெருமாளே.
