பாடல் 100
விந்ததி னுறி வந்தது காயம்
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- யமுனா கல்யாணி
- தாளம்
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தந்தன தான தந்தன தானதந்தன தானதனதான
பாடல் வரிகள்
விந்ததி னுறி வந்தது காயம்வெந்தது கோடியினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவுவிஞ்சையர் போலஅடியேனும்
வந்துவி நாச முன்கலி தீரவண்சிவ ஞானவடிவாகி
வன்பத மேறி யென்களை யாறவந்தருள் பாதமலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகியென்கணி லாடுதழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காயரெங்கள் சுவாமியருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாதுதன்றிரு மார்பிலணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவுகந்தசு ரேசர்பெருமாளே.
