பாடல் 101
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- மாண்ட்
- தாளம்
- ஆதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதான தந்த தனதான தந்ததனதான தந்ததனதான
பாடல் வரிகள்
விறல்மார னைந்து மலர்வாளி சிந்தமிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்றவினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்பமயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்துகுறைதீர வந்துகுறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்துவழிபாடு தந்தமதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவே லெறிந்தஅதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சுமடியா ரிடைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்துஅலைவா யுகந்தபெருமாளே.
