Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 99

விதிபோலு முந்த விழியாலு மிந்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதான தந்த தனதான தந்ததனதான தந்ததனதான

Lyrics

விதிபோலு முந்த விழியாலு மிந்துநுதலாலு மொன்றியிளைஞோர்தம்

விரிவான சிந்தை யுருவாகி நொந்துவிறல்வேறு சிந்தைவினையாலே

இதமாகி யின்ப மதுபோத வுண்டுஇனிதாளு மென்றுமொழிமாதர்

இருளாய துன்ப மருள்மாயை வந்துஎனையீர்வ தென்றும்ஒழியாதோ

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டிவருமால முண்டுவிடையேறி

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்வருதேவ சம்புதருபாலா

அதிமாய மொன்றி வருசூரர் பொன்றஅயில்வேல்கொ டன்றுபொரும்வீரா

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்துஅலைவாயு கந்தபெருமாளே.

All songs →