Song 98
வரியார் கருங்கண் ...... மடமாதர்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- காம்போதி / ஸஹானா
- Thalam
- சதுஸ்ர ஜம்பை (7)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனா தனந்ததனதான
Lyrics
வரியார் கருங்கண்மடமாதர்
மகவா சைதொந்தமதுவாகி
இருபோ துநைந்துமெலியாதே
இருதா ளினன்புதருவாயே
பரிபா லனஞ்செய்தருள்வோனே
பரமே சுரன்றனருள்பாலா
அரிகே சவன்றன்மருகோனே
அலைவா யமர்ந்தபெருமாளே.
