Song 989
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
- Sthalam
- முள்வாய்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்ததன்னா தனந்த தந்ததனதான
Lyrics
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்துவெவ்வே றுழன்று றன்றுமொழிகூற
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்கமென்னா ளறிந்த டைந்துஉ யிர்போமுன்
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்துபொய்யார் மனங்கள் தங்குமதுபோலப்
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்குபுன்னா யுளுங்க வின்றுபுகுவாயே
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்துபன்னா கணைந்து சங்கமுறவாயிற்
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்றுபண்ணாது கின்ற கொண்டல்மருகோனே
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்துமுன்னோர் பொருங்கை யென்றுமுனையாட
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மாதர் வந்தி றைஞ்சுமுள்வாய் விளங்க நின்றபெருமாளே.
