Song 988
ஆகத் தேதப் பாமற் சேரிக்
- Sthalam
- காமத்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானத் தானத் தானத் தானத்தானத் தானத்தனதானா
Lyrics
ஆகத் தேதப் பாமற் சேரிக்கார்கைத் தேறற்கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்தாயக் காயப்பிறையாலே
போகத் தேசற் றேதற் பாயற்பூவிற் றீயிற்கருகாதே
போதக் காதற் போகத் தாளைப்பூரித் தாரப்பூணராயே
தோகைக் கேயுற் றேறித் தோயச்சூர்கெட் டோடப்பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்தூவற் சேவற்கொடியோனே
பாகொத் தேசொற் பாகத் தாளைப்பாரித் தார்நற்குமரேசா
பாரிற் காமத் தூரிற் சீலப்பாலத் தேவப்பெருமாளே.
