Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 945

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதனத்த தந்தன தானன தானனதனத்த தந்தன தானன தானனதனத்த தந்தன தானன தானனதனதான

Lyrics

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிடகறுத்த குஞ்சியு மேநரை யாயிடமலர்க்க ணண்டிரு ளாகியு மேநடைதடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மகவெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதினநகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடுசினத்து வந்தெதிர் சூலமு மேகையிலெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபயமுறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்பிடிக்கு முன்புன தாள்மல ராகியஇணைப்ப தந்தர வேமயில் மீதினில்வரவேணும்

கனத்த செந்தமி ழால்நினை யேதினநினைக்க வுந்தரு வாயுன தாரருள்கருத்தி ருந்துறை வாயென தாருயிர்துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனையுடற்ப குந்திரு கூறென வேயதுகதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறைதிருக்க லந்திடு மாலடி நேடியஅரற்க ரும்பொருள் தானுரை கூறியகுமரேசா

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்நீனைத்தி னந்தொழு வாரம ராய்புரியருட்செ றிந்தவி நாசியுள் மேவியபெருமாளே.

All songs →