Song 930
குருவு மடியவ ரடியவ ரடிமையு
- Sthalam
- நெருவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
குருவு மடியவ ரடியவ ரடிமையுமருண மணியணி கணபண விதகரகுடில செடிலினு நிகரென வழிபடுகுணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்அழுகு தலுமிலி நலமிலி பொறையிலிகுசல கலையிலி தலையிலி நிலையிலிவிலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியும்அளக மெனவள ரடவியில் மறுகியுமகர மெறியிரு கடலினில் முழுகியுமுழலாமே
வயலி நகரியி லருள்பெற மயில்மிசையுதவு பரிமள மதுகர வெகுவிதவனச மலரடி கனவிலு நனவிலுமறவேனே
உ ருவு பெருகயல் கரியதொர் முகிலெனுமருது நெறிபட முறைபட வரைதனில்உ ரலி னொடுதவழ் விரகுள இளமையுமிகமாரி
உ மிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரிகவிகை யிடவல மதுகையு நிலைகெடவுலவில் நிலவறை யுருவிய வருமையுமொருநூறு
நிருப ரணமுக வரசர்கள் வலிதபவிசயன் ரதமுதல் நடவிய வெளிமையுநிகில செகதல முரைசெயு மரிதிருமருகோனே
நிலவு சொரிவளை வயல்களு நெடுகியகுடக தமனியு நளினமு மருவியநெருவை நகருறை திருவுரு வழகியபெருமாளே.
