Song 929
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
- Sthalam
- கருவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தனதனதன தந்தன தாத்தனதனதான
Lyrics
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவமுறுவல்மு கங்குறு வேர்ப்பெழவநுபோக
முளைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிடமுகுளித பங்கய மாக்கரநுதல்சேரத்
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினிதுவளமு யங்கிவி டாய்த்தரிவையர்தோளின்
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்சொருபமு நெஞ்சிலி ராப்பகல்மறவேனே
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்சரவண சம்பவ தீர்க்கஷண்முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடுசமர முகந்தனில் நாட்டியமயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கதஅசுரர கங்கெட வார்த்திடுகொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிடஅமரரை யுஞ்சிறை மீட்டருள்பெருமாளே.
