Song 902
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தத்தத்த தத்ததனதத்தத்த தத்ததன---------- 3 முறை ---------தந்ததான
Lyrics
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமதமத்தக்க ளிற்றையெதிர்
புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகைகட்டிப்பி ணித்திறுகி
யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகிமுத்தத்தை யிட்டுநகதந்தமான
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்எற்றிக்க லக்கமுற
இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையதுதொட்டுத்தி ரித்துமிக
இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழிசெக்கச்சி வக்கவளைசெங்கைசோர
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபலகொத்துக்கு ழற்குலைய
மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகரநெக்குக்க ருத்தழிய
அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரணவர்க்கத்தி னிற்புணருமின்பவேலை
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவரகட்டுப்பொ றிச்சியர்கள்
மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழையுற்றுத்து திக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்ரக்ஷ¢த்த ளித்தருள்வதெந்தநாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுடதத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகணசத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்திதக்குத்த குத்தகுர்ததிங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரிதத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடிடட்டட்ட குட்டகுட
தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகைபக்கக்க ணப்பறைதவண்டைபேரி
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படைபக்கத்தி னிற்சரிய
எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதிவிட்டத்த மித்ததென
வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுதுதொக்குக்கு னிப்புவிடவென்றவேலா
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவிசித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதித்தவத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறிதப்பற்று ரைக்கவலதம்பிரானே.
(0774-0000-5640)
