Song 895
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
- Sthalam
- அத்திப்பட்டு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தத்தத் தத்ததனதனதனன தனதனன தத்தத் தத்ததனதனதனன தனதனன தத்தத் தத்ததனதனதான
Lyrics
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிடகனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினிலிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகுகலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷ¢யவர்வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறுமனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுறமகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன்மலராலே
மயல்விளைய அரியையர்கள் கைப்பட் டெய்த்துமிகமனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதிவழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள்தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினிலுறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடிபுயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில்மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகடலதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையறஅமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகுமிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகுமழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறைபெருமாளே.
