Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 894

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தனத்த தான தானன தனத்த தானதானன தனத்த தானதனதான

Lyrics

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூலநீள்குளிர் வெதுப்பு வேறுமுளநோய்கள்

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடுநீடிய விரத்த மூளைதசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறுபாய்பிணி யியற்று பாவைநரிநாய்பேய்

பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தானபாழுட லெடுத்து வீணிலுழல்வேனோ

நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூதநாயக ரிடத்து காமிமகமாயி

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேதநாயகி யுமைச்சி நீலிதிரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாகவாணுத லளித்த வீரமயிலோனே

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலைவாகுள குறட்டி மேவுபெருமாளே.

All songs →