Song 891
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
- Sthalam
- பெரும்புலியூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்தனன தானத் தனந்தனன தானத்தனந்தனன தானத்தனதான
Lyrics
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்சரங்களொளி வீசப்புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்சரங்கண்மறி காதிற்குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்றிரம்பையழ கார்மைக்குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்றிரங்கியிரு தாளைத்தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்சிறந்தமயில் மேலுற்றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்சினந்தசுரர் வேரைக்களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்ப்ரசண்டஅபி ராமிக்கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்பெரும்புலியுர் வாழ்பொற்பெருமாளே.
