Song 890
விகட சங்கட வார்த்தை பேசிகள்
- Sthalam
- திருப்பழுவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தந்தன தாத்த தானனதனன தந்தன தாத்த தானனதனன தந்தன தாத்த தானனதனதான
Lyrics
விகட சங்கட வார்த்தை பேசிகள்அவல மங்கைய ரூத்தை நாறிகள்விரிவ டங்கிட மாற்றும் வாறெனவருவார்தம்
விதம்வி தங்களை நோக்கி யாசையிலுபரி தங்களை மூட்டி யேதமஇடும ருந்தொடு சோற்றை யேயிடுவிலைமாதர்
சகல மஞ்சன மாட்டி யேமுலைபடவ ளைந்திசை மூட்டி யேவருசரச இங்கித நேத்தி யாகியசுழலாலே
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானதுமலர வுந்தியை வாட்டி யேயிடைதளர வுங்கணை யாட்டும் வேசியருறவாமோ
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிருதமையர் தம்பியர் மூத்த தாதையர்திலக மைந்தரை யேற்ற சூரரைவெகுவான
செனம டங்கலு மாற்றி யேயுடல்தகர அங்கவர் கூட்டை யேநரிதிருகி யுண்டிட ஆர்த்த கூளிகளடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரதமுடிய அன்பர்க ளேத்த வேயரியருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன்மருகோனே
அமர ரந்தணர் போற்ற வேகிரிகடல திர்ந்திட நோக்கு மாமயில்அழகொ டும்பழு வூர்க்குள் மேவியபெருமாளே.
