Song 882
மானை நேர்விழி யொத்தம டந்தையர்
- Sthalam
- காவ்ளுர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தத்தன தந்தனதான தானன தத்தன தந்தனதான தானன தத்தன தந்தனதனதான
Lyrics
மானை நேர்விழி யொத்தம டந்தையர்பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்வாச மாமலர் கட்டும ரம்பையரிருதோளும்
மார்பு மீதினு முத்துவ டம்புரள்காம பூரண பொற்கட கம்பொரவாரி நீலவ ளைக்கைபு லம்பிடஅநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்நாண மாறம யக்கியி யம்பவும்ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும்உ றவாடி
ஆர வாரந யத்தகு ணங்களில்வேளி னூல்களை கற்றவி ளம்பவும்ஆகு மோகவி பத்துமொ ழிந்துனையடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறைபோன போதுதொ குத்தசி னங்களில்தாப சோபமொ ழிப்பஇ லங்கையுமழிவாகத்
தாரை மானொரு சுக்கிரி பன்பெறவாலி வாகுத லத்தில்வி ழுந்திடசாத வாளிதொ டுத்தமு குந்தனன்மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புனமீதில் வாழித ணத்திலு றைந்திடுகாவல் கூருகு றத்திபு ணர்ந்திடுமணிமார்பா
காவு லாவிய பொற்கமு கின்திரள்பாளை வீசம லர்த்தட முஞ்செறிகாவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரிபெருமாளே.
