Song 88
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தனதனதானா
Lyrics
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்வாசல் தொறுந டந்துசி ணுங்கிகள்பழையோர்மேல்
வால நேசநி னைந்தழு வம்பிகள்ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிகளெவரேனும்
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்காசி லாதவர் தங்களை யன்பறநீதி போலநெ கிழ்ந்தப றம்பிகளவர்தாய்மார்
நீலி நாடக மும்பயில் மண்டைகள்பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்நீச ரோடுமி ணங்குக டம்பிகளுறவாமோ
பாயு மாமத தந்திமு கம்பெறுமாதி பாரத மென்ற பெருங்கதைபார மேருவி லன்று வரைந்தவனிளையோனே
பாவை யாள்குற மங்கை செழுந்தனபார மீதில ணைந்து முயங்கியபாக மாகிய சந்தன குங்குமமணிமார்பா
சீய மாயுரு வங்கொடு வந்தசுரேசன் மார்பையி டந்து பசுங்குடர்சேர வாரிய ணிந்த நெடும்புயன்மருகோனே
தேனு லாவுக டம்ப மணிந்தகிணட சேகர சங்கரர் தந்தருள்தேவ நாயக செந்திலு கந்தருள்பெருமாளே.
