Song 87
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்த தனதனன தந்ததனதனன தந்ததனதானா
Lyrics
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்வலிமைகுல நின்றநிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்வரிசைதம ரென்றுவருமாயக்
கனவுநிலை யின்ப மதனையென தென்றுகருதிவிழி யின்பமடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்துகருவில்விழு கின்றதியல்போதான்
நினையுநின தன்பர் பழவினைக ளைந்துநெடுவரைபி ளந்தகதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்நிலைபெறஇ ருந்தமுருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தைபுளகஇரு கொங்கைபுணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்பொடிபடந டந்தபெருமாளே.
