Song 879
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
- Sthalam
- திருக்குரங்காடுதுறை
- Raagam
- பாகேஸ்ரீ
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ரஏகம் (3)தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்தனந்தான தனத்தனனத்தனதான
Lyrics
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கசைந்தாடு குழைக்கவசத்திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்ததகரத்தணிந்தாழி வனைக்கடகச்சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்சிவந்தேறி மணத்தமலர்ப்புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்தினந்தோறு நடிப்பதுமற்புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்டிளந்தாது மலர்த்திருவைச்சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்திருங்கான நடக்குமவற்கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்கொடுந்தாரை வெயிற்கயிலைத்தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்குரங்காடு துறைக்குமரப்பெருமாளே.
