Song 878
திட்டெ னப்பல செப்பைய டிப்பன
- Sthalam
- திருச்சக்கிரப்பள்ளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தத்தன தத்தன தத்தனதத்த தத்தன தத்தன தத்தனதத்த தத்தன தத்தன தத்தனதனதான
Lyrics
திட்டெ னப்பல செப்பைய டிப்பனபொற்கு டத்தையு டைப்பன வுத்தரதிக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பனவதின்மேலே
செப்ப வத்திம ருப்பையொ டிப்பனபுற்பு தத்தையி மைப்பில ழிப்பனசெய்த்த லைக்கம லத்தைய லைப்பனதிறமேய
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பனசித்த முற்பொர விட்டுமு றிப்பனபுட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பனஇளநீரைப்
புக்கு டைப்பன முத்திரை யிட்டதனத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்புத்தி யுற்றமை யற்றிட எப்பொழுதருள்வாயே
துட்ட நிக்ரக சத்தித ரப்ரபலப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரயதுட்க ரக்கவி தைப்புக லிக்கரசெனுநாமச்
சொற்க நிற்கசொ லட்சண தட்சணகுத்த ரத்தில கத்திய னுக்கருள்சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண்முகநாத
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரகசத்து வத்தைய ளித்திடு செய்ப்பதிமயிலேறி
சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்மிக்க ரத்நம திற்புடை சுற்றியசக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள்பெருமாளே.
