Song 845
முகர வண்டெழுங் கருமுகி லலையவு
- Sthalam
- திருப்பெருந்துறை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தந்தனந் தனதன தனதனதனன தந்தனந் தனதன தனதனதனன தந்தனந் தனதன தனதனதனதான
Lyrics
முகர வண்டெழுங் கருமுகி லலையவுமுதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவுமுகிள சந்திரன் பொருநுதல் வெயரவுமமுதூறும்
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவுமருவு சங்கநின் றொலிகொடு பதறவுமுழுது மன்புதந் தமளியி னுதவியஅநுராகச்
சிகர கும்பகுங் குமபுள கிததனமிருபு யம்புதைந் திடநடு விடைவெளிதெரிய லின்றியொன் றிடவுயி ருயிருடனுறமேவித்
திமிர கங்குலின் புதவிடு மவசரநினைவு நெஞ்சினின் றறவவர் முகமதுதெரிச னஞ்செயும் பரிவற இனியருள்புரிவாயே
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொருவடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபதுபுயவீரன்
மடிய வங்குசென் றவனொரு பதுமுடிமுடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்மதிலி லங்கையும் பொடிபட அருளரிமருகோனே
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுறவிரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசைநினைவி னுந்தியம் புவிதனை வலம்வருமிளையோனே
நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்பவள மும்பொரும் பழனமு மழகுறநிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறுபெருமாளே.
