Song 844
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
- Sthalam
- திருப்பெருந்துறை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தனந் தனதன தனத்தனந் தனதனதனத்தனந் தனதனதனதான
Lyrics
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மனமகிழ்ச்சிகொண் டிடஅதிவிதமான
வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்மயக்கவந் ததிலறிவழியாத
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தரகளிப்புடன் களிதருமடமாதர்
கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடிகளைத்தருந் திருவுளமினியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடுபுகைப்பரந் தெரியெழவிடும்வேலா
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவிபொறுத்தமந் தரகிரிகடலு¡டே
திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுகதிருட்டியெண் கணன்முதலடிபேணத்
திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடுதிருப்பெருந் துறையுறைபெருமாளே.
