Song 839
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்
- Sthalam
- வேதாரணியம்
- Raagam
- மோஹனம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)தானன தத்தத் தந்தன தந்தனதனதான
Lyrics
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணிகழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறுதுணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தினமுழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனைதருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையையெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல்மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திருமுருகோனே
வேதவ னத்தற் சங்கரர் தந்தருள்பெருமாளே.
