Song 838
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
- Sthalam
- வலிவலம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தானன தனதன தனதனதனத்த தானன தனதன தனதனதனத்த தானன தனதன தனதனதனதான
Lyrics
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்இருக்க வேறொரு பெயர்தம திடமதுதுவட்சி யேபெறி லவருடன் மருவிடுபொதுமாதர்
துவக்கி லேயடி படநறு மலரயன்வதித்த தோதக வினையுறு தகவதுதுறக்க நீறிட அரகர வேனவுளமமையாதே
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறுமசட்ட னாதுலன் அவமது தவிரநினடியாரோ
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனையிருத்தி யேபர கதிபெற மயில்மிசையரத்த மாமணி யணிகழ லிணைதொழஅருள்தாராய்
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்விடுத்து ராவணன் மணிமுடி துணிபடஎதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன்மருகோனே
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறையெலுப்பு மாலிகை புனைசடி லவனருள்புதல்வோனே
வடுத்த மாவென நிலைபெறு நிருதனைஅடக்க ஏழ்கட லெழுவரை துகளெழவடித்த வேல்விடு கரதல ம்ருகமதபுயவேளே
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகியகடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்மதித்த சேவக வலிவல நகருறைபெருமாளே.
