Song 815
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
- Sthalam
- விஜயபுரம்
- Raagam
- ஹம்ஸாநந்தி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)தனதன தந்தன தானன தனதன தந்தன தானனதனதன தந்தன தானனதனதான
Lyrics
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடைகுளுகுளெ னும்படி மூடியமலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழுகுமிழியி னுங்கடி தாகியெயழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமிலவுடத மும்பல யோகமுமுயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநினழகிய தண்டைவி டாமலரடைவேனோ
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதரமிடிபட இன்பம கோததிவறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதரஎழில்பட மொன்று மொராயிரமுகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழவெயில்நகை தந்த புராரிமதனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவடவிஜயபு ரந்தனில் மேவியபெருமாளே.
