Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 814

சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்த தத்ததன தத்த தத்ததனதத்த தத்ததன தத்த தத்ததனதத்த தத்ததன தத்த தத்ததனதந்ததான

Lyrics

சித்தி ரத்திலுமி குத்த பொற்பவளமொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலைசிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடையவஞ்சிமாதர்

சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியதுசிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிமளங்கள்வீசப்

பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்வித்து ருத்துநுவ ளைத்த நெற்றிவனைபற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல்விஞ்சைபேசிப்

பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவிலத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலைபட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியெனமங்குவேனா

தத்த னத்தனத னத்த னத்தனனதித்தி மித்திமிதி மித்தி மித்திமிததக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடெனசங்குபேரி

சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடிசக்கு முக்கிவிட கட்க துட்டசுரரங்கமாள

வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையருளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையருவித்த ளித்தமதி பெற்ற தத்தைமணமுண்டவேலா

வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடியைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ்தம்பிரானே.

All songs →