Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 74

பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத்தனதான

Lyrics

பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்பந்தபா சந்தனிற்றடுமாறிப்

பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்பண்பிலா டம்பரப்பொதுமாதர்

தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்சங்கைமால் கொண்டிளைத்தயராதே

தண்டைசூழ் கிண்கிணிப் புண்டாண கந்தனைதந்துநீ யன்புவைத்தருள்வாயே

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்தண்டவே தண்டமுட்படவேதான்

அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்கண்டலோ கங்கொடுத்தருள்வோனே

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்செஞ்சடா பஞ்சரத்துறுதோகை

சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்செந்தில்வாழ் செந்தமிழ்ப்பெருமாளே.

All songs →