Song 73
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தந் தானன தத்தன தத்தனதனத்தந் தானன தத்தன தத்தனதனத்தந் தானன தத்தன தத்தனதனதான
Lyrics
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்நிழற்கண் காணவு ணக்கிம ணம்பலதடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனைநினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலியெனவோதி
உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திடவிடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனையுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனிலுழலாமே
உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்உளத்தின் பார்வையி டத்தினி னைந்திடஅருள்வாயே
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலையெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரிகடக்குந் தானவ னைக்கொல ரும்புயன்மருகோனே
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழிதிருச்செங் கோடு இடைக்கழி தண்டலைகளர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம்அமர்வோனே
சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவநடக்குந் தேரனி கப்படை கொண்டமர்செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனையுருவானோன்
செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர்குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கியபெருமாளே.
