Song 723
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
- Sthalam
- திருவக்கரை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தன தத்தன தத்தனதனதான
Lyrics
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிடநினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினையொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரையித்ழுறல்
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடுமெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடுமடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரிஇத்தொழி லிக்குணம் விட்டிட நற்பதமருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கருணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்நத்துதரித்தக ரத்தர்தி ருத்துளவணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினைநட்டர வப்பணி சுற்றிம தித்துளநத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர்மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசிறுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகுறத்தித னக்கும னப்ரிய முற்றிடுகுமரேசா
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடுகுற்றம றக்கடி கைப்புனல் சுற்றியகொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறைபெருமாளே.
