Song 722
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
- Sthalam
- திருவக்கரை
- Raagam
- குந்தலவராளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதனதன தத்தன தனதன தத்தனதனதன தத்தனதனதானா
Lyrics
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவதொழிவ துனைச்சிறிதுரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகுகடுநர குக்கிடையிடைவீழா
உ லகு தனிற்பல பிறவி தரித்தறவுழல்வது விட்டினியடிநாயேன்
உ னதடி மைத்திரள் அதனினு முட்படவுபய மலர்ப்பதமருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிடநிசிசர னைப்பொருமயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடைகுறமக ளைப்புணர்மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தருமணிதிரு வக்கரையுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றனஅவைதரு வித்தருள்பெருமாளே.
