Song 710
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
- Sthalam
- திருப்பேர்ருர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தா தானன தானா தானனதனத்தா தானன தானா தானனதனத்தா தானன தானா தானனதனதான
Lyrics
அனுத்தே னேர்மொழி யாலே மாமயலுடைத்தார் போலவு மோர்நா ளானதிலடுத்தே தூதுகள் நூறா றானதும்விடுவார்கள்
அழைத்தே வீடினி லேதா னேகுவர்நகைத்தே மோடிக ளாவார் காதலொடடுத்தே மாமுலை மீதே மார்புறஅணைவார்பின்
குனித்தே பாகிலை யீவார் பாதியில்கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானதுகுடிப்பார் தேனென நானா லீலைகள்புரிவார்கள்
குறித்தே மாமய லாலே நீள்பொருள்பறிப்பா ராசுகள் சூழ்மா பாதககுணத்தார் மாதர்கள் மேலா சாவிடஅருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினையெடுத்தே தான்வர வேதான் யாவரும்வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும்விறல்வீரா
மலர்த்தே னோடையி லோர்மா வானதைபிடித்தே நீள்கர வாதா டாழியைமனத்தா லேவிய மாமா லானவர்மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவுமெடுத்தோர் வேல்விடு தீரா தாரணிதிருத்தோ ளாஇரு பாதா தாமரைமுருகோனே
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிகளடுக்கார் மாளிகை யேநீ ளேருளதிருப்போ ரூருறை தேவா தேவர்கள்பெருமாளே.
