Song 709
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
- Sthalam
- கோடைநகர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்த தான தந்த தானத்த தான தந்ததானத்த தான தந்ததனதான
Lyrics
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்துவாய்மைப்ர காச மென்றுநிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்றவாயுப்பி ராண னொன்றுமடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்துரோமத்து வார மெங்குமுயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டுலோகத்தில் மாய்வ தென்றுமொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்சமேலிட்ட சூர்த டிந்தகதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கிவேடிச்சி காலி லன்றுவிழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்தகூளப்பு ராரி தந்தசிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்டகோடைக்குள் வாழ வந்தபெருமாளே.
