Song 677
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
- Sthalam
- திருவாலங்காடு
- Raagam
- மோஹனம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்தனனாத் தானன தானம்தனதான
Lyrics
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்தணியாச் சாகர மேழுங்கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்தரிகூத் தாடிய மாவுந்தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்துணையாத் தாழ்வற வாழும்பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்தொலையாப் பாடலை யானும்புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்பழமாய்ப் பார்மிசை வீழும்படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்பறிகோப் பாளிகள் யாருங்கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்டிருநீற் றாலம ராடுஞ்சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்திருவோத் தூர்தனில் மேவும்பெருமாளே.
