Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 676

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்ததனதன தானந் தாத்ததனதான

Lyrics

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டிவரவிடு தூதன் கோட்டிவிடுபாசம்

மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டுமதிகெட மாயந் தீட்டியுயிர்போமுன்

படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்றபழவினை பாவந் தீர்த்துனடியேனைப்

பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்தபரபுகழ் பாடென் றாட்கொடருள்வாயே

முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்முதிர்நட மாடுங் கூத்தர்புதல்வோனே

முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டிமுதல்மற மானின் சேர்க்கைமயல்கூர்வாய்

இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டியெதிர்பொரு சூரன் தாக்கவரஏகி

இலகிய வேல்கொண் டார்த்து உ டலிரு கூறன் றாக்கியிமையவ ரேதந் தீர்த்தபெருமாளே.

All songs →