Song 665
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
- Sthalam
- திருவல்லம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானந் தனதன தானந்தனதன தானந்தனதான
Lyrics
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்நடுநடு வேயென்புறுகீலும்
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்றுறநடை யாருங்குடிலுடே
விசையுறு காலம் புலனெறி யேவெங்கனலுயிர் வேழந்திரியாதே
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்தனுமென வோதும்விறல்தாராய்
இசையுற வேயன் றசைவற வூதும்எழிலரி வேழம்எனையாளென்
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்இடமிமை யாமுன்வருமாயன்
திசைமுக னாருந் திசைபுவி வானுந்திரிதர வாழுஞ்சிவன்மூதூர்
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்திருவல மேவும்பெருமாளே.
