Song 663
பையரவு போலு நொய்யஇடை மாதர்
- Sthalam
- வெள்ளிகரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தய்யதன தான தய்யதன தானதய்யதன தானதனதான
Lyrics
பையரவு போலு நொய்யஇடை மாதர்பையவரு கோலந்தனைநாடிப்
பையலென வோடி மையல்மிகு மோகபவ்வமிசை வீழுந்தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேசமுள்ளுருக நாடும்படிபேசி
உள்ளதுமி லாது மல்லதவி ரோதஉல்லசவி நோதந்தருவாயே
வையமுழு தாளு மையகும ரேசவள்ளிபடர் கானம்புடைசூழும்
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாளமையுததி யேழுங்கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழவெல்லயில்வி நோதம்புரிவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதிவெள்ளிநகர் மேவும்பெருமாளே.
