Song 641
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
- Sthalam
- கதிர்காமம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தானத்த தனதனன தானத்ததனதனன தானத்ததனதான தானனா
Lyrics
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்டதனமசைய வீதிக்குள்மயில்போ லுலாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்தமையுணர ராகத்தின்வசமாக மேவியே
உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்குமுரியவர் மகாதத்தையெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்குமுனதருள்க்ரு பாசித்தமருள்கூர வேணுமே
இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தியெழுதரிய காயத்ரியுமையாள் குமாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்துஇதணருகு சேவிக்குமுருகா விசாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்குமதிகவித சாமர்த்யகவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்தஅரியகதிர் காமத்திலுரியாபி ராமனே.
