Song 640
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
- Sthalam
- கதிர்காமம்
- Raagam
- தோடி
- Thalam
- ஆதி (2 களை)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனதன தனதனதானத் தனந்தந்தனதான
Lyrics
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்காமத் தரங்கம்மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுககாமத் தனஞ்சம்புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடுமாவிற் புகுங்கந்தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனெனவாவிக் கினம்பொன்றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமையாயப் புனஞ்சென்றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவியாளப் புயங்கொண்டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுளஏழைக் கிடங்கண்டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினுமேழைக் கிரங்கும்பெருமாளே.
